Breaking News

புத்தளம் ஜெயாபார்ம் வெற்றிக்கிண்ணம். அரை இறுதியில் போட்டியிட்ட புத்தளம் லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் காற்பந்தாட்ட லீக் புத்தளத்தில் தொடராக நடாத்தி வருகின்ற காற்பந்தாட்ட தொடரான ஜெயா பார்ம் வெற்றிக்கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான அரை இறுதி ஆட்டம் ஒன்றில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 

ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்கி வருகிறார்.


இந்த பரபரப்பான அரை இறுதி ஆட்டம் சனிக்கிழமை (07) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


புத்தளம் லிவர்பூல் அணியும், புத்தளம் நகரின் மிகப்பழைவாய்ந்த அணியான போல்டன் அணியும் இந்த அரை இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன.


போட்டி ஆரம்பம் முதல் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில், போட்டி நிறைவு பெறும் தருவாயில் லிவர்பூல் அணி வீரர் எம்.என்

எம்.ஆஷிக் தனது அணிக்கான கோலினை பெற்றுக்கொடுத்தார். 


இரு அணிகளும் கடைசி நிமிடங்களில் கோல்களை போட எத்தனித்த போதிலும் அது கைகூடாமல் போனதால் ஆட்ட நேர முடிவில் லிவர்பூல் அணி 01 : 00 கோலினால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


அடுத்த வாரம் அளவில் நடைபெறவுள்ள மற்றுமொரு அரை இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ள த்ரீ ஸ்டார்ஸ் மற்றும் அல் அஷ்ரக் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் பர பரப்பான இறுதிப்போட்டியில் லிவர்பூல் அணி பங்கேற்கவுள்ளது.


போட்டிக்கு நடுவர்களாக ஜே.எம்.அம்ஜத், எஸ்.எம்.ஜிப்ரி, ஏ.ஓ.அஸாம், ஏ.ஏ.கியாஸ் ஆகியோர் கடமையாற்றினார்.


லிவர்பூல் கழக முகாமையாளர் எச்.எச்.ஹம்ருசைன் அணியை வழி நடாத்தி இருந்ததோடு வீரர்களுக்கான பயிற்சியினை லிவர்பூல் கழக முன்னாள் வீரர்களும், காற்பந்தாட்ட லீக்கின் மத்தியஸ்த்தர் சங்க உறுப்பினர்களுமான எம்.ஐ.எம்.அலி மற்றும் எம்.ஓ.ஜாக்கிர் ஆகியோர் வழங்கி இருந்தனர்.


போல்டன் அணியினை அதன் தலைவரும், போல்டன் அணியின் முன்னாள் வீரருமான எம்.எஸ்.எம்.நிஸ்வர் வழி நடாத்தி இருந்தார்.


போட்டியன்று அதிதிகளாக முன்னாள் புத்தளம் நகர பிதாவும், லீக் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி இணை அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான ரனீஸ் பதியுதீன், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், போட்டி அனுசரணையாளருமான பர்வீன் ராஜா, புத்தளம் ஹுசைன் மஸ்ஜித் நிர்வாக தலைவர் அஷ்ஷெய்க் ஷாபி ஷஹ்தி, லெஜன்ட்ஸ் கழக ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இந்த போட்டி தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ளதாக தொடரின் அனுசணையாளர் பர்வீன் ராஜா தெரிவித்தார்.


குறிப்பு:

லிவர்பூல் அணி வெள்ளை சிவப்பு ஜேஸி.

















No comments

note