Breaking News

"ஜே.ஓ.74" குழுவினரின் முயற்சியோடு சுழல் நாற்காலி கையளிப்பு.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன்,  கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் காரியாலய தேவைக்கென சுழல் நாற்காலி ஒன்றினை "யாழ் ஒஸ்மானியன்ஸ் 74" (ஜே.ஓ.74) அமைப்பினர் அன்பளிப்பு செய்துள்ளனர்.


வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக இருந்து அண்மையில் அதிபராக பதவி உயர்வு பெற்று 

கடமையைப் பொறுப்பேற்ற  "யாழ் ஒஸ்மானியன்ஸ் 74" குழுவின் உறுப்பினரான எம்.ஐ.எம்.ஐ. ஸர்மில் அவர்களை கெளரவிக்கும் முகமாகவும், வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை மேலும் முன்னெடுக்கவும், உற்சாகமூட்டும் வகையிலும் இந்த பெறுமதியான சுழலும் நாற்காலி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


"யாழ் ஒஸ்மானியன்ஸ் 74"

குழுவினரின் சார்பாக அதன் உறுப்பினரான எம்.எம். முராத் அவர்களினால்  திங்கட்கிழமை (02) காலை பாடசாலையில் வைத்து அதிபர் எம்.ஐ.எம்.ஐ. ஸர்மில் அவர்களிடம் இந்த சுழல் நாற்காலி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எஸ்.ஏ.சீ.எம். பஷீர், எம்.நஸ்ருதீன், ஆசிரியர்களான எச்.என்.எம்.சிபாக், பாறூக் பதீன், அஷ்ஷெய்க் ஏ.ஓ.கஹ்ஹார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இவ்வாறான உதவிகளுக்காக ஒன்றினைந்து செயற்பட்ட "யாழ் ஒஸ்மானியன்ஸ் 74" குழுவினருக்கு பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.







No comments

note