Breaking News

இன்று முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் புத்தளம் மாவட்டத்தில் 14,967 பேர் தகுதி

(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டம்பர் 5 ம்  6 ம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


செப்டம்பர் 4 ம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 ம் மற்றும் 12 ம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


இம்முறை புத்தளம் மாவட்டத்தில்  15,270 தபால் மூல வாக்கு விண்ணப்பங்களில் 303 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 14,967 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதன்படி, இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712319 ஆகும்.


தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.




No comments

note