பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் மீழாத் விழா நிகழ்வுக்கு ஜே.எம். றஸ்மி 100,000/= ரூபா நிதி அன்பளிப்பு!.
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இடம்பெறவுள்ள மீழாத் விழா நிகழ்வுக்கு அனுசரணையாளராக குவைத் - கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவரும், அக்கறைப்பற்று உதவி மையத்தின் தலைவரும், சமூக சேவையாளருமான ஜே.எம். றஸ்மி அவர்கள் ஒரு இலட்சம் (100,000/=) ரூபா நிதியினை அன்பளிப்பு செய்துள்ளார்.
இந்நிதியினை FARZANA EXPORT உரிமையாளரும், சித்தீக் சர்வதேச கலாபீடத்தின் பணிப்பாளருமான அல்ஹாஜ் என்.எம். சித்தீக் அவர்களின் ஊடாக பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களிடம் நிதிக்கான மாதிரி காசோலையை நேற்று (17) வழங்கினார்.
இந்நிகழ்வில் கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச். எச்.எம். நஜீம் (ஷர்கி), பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஏ. அஷ்ரப், மற்றும் ஏ.எச்.பௌசுல் ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிதியினை வழங்கிய ஜே.எம். றஸ்மி அவார்களுக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கல்வி அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியோர் சார்பாக தாம் நன்றி தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
KMCC (NS) MEDIA UNIT
No comments