புத்தளம் Picta தகவல் தொழில்நுட்ப சமூக தொண்டு அமைப்புக்கு வவுனியா பல்கலைக்கழகத்தின் உடனான ஒப்பந்தம்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளத்தில் இயங்கி வரும் Picta (Puttalam ICT Association) தொண்டு நிறுவனம் அண்மையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது.
இதில் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தல், மனிதவள மேம்பாட்டு திட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இத்திட்டங்களை விரிவுபடுத்தல் போன்ற பல செயற்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும் என Picta அமைப்பின் தலைவர், புத்தளம் ஐ.சொப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.கே.அப்ராஸ் தெரிவித்தார்.
புத்தளத்திற்கு பல கல்வி சார் வாய்ப்புகள் பெறுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என Picta அமைப்பின் தேசிய அமைப்பாளரும், அமேசன் கல்லூரி பணிப்பாளருமான இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு Picta அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான VTA இன் விரிவுரையாளர் எப்.எம். அன்சாப், Picta அமைப்பின் இணைப்பாளர் ஸ்ரீ சுதர்ஷன், வவுனியா ICT அமைப்பின் தலைவர் என்ட்ரூ என்ஸ்லே, வவுனியா பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் ஏ.புஷ்பநாதன், வுனியா பல்கலைக்கழகத்தின் பதில் உப வேந்தர் பேராசிரியர் யோகராஜ் நந்தகோபன், கலாநிதி
அலெக்ஸாண்டர் என்ஸ்லே, Dr. அலெக்ஸாண்டர் ருக்ஷன், ADSFLY நிறுவனத்தின் பணிப்பாளர், Picta சங்கத்தின் செயலாளர் ருஸ்லான் ரசூல்தீன் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
No comments