Dr. I.M. இல்யாஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்
புத்தளம், மௌலாமகாம் மர்க்கஸ் மஹல்லா, மஸ்ஜித் வீதி, அரபாத் மோலுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவரும், முன்னாள் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய 2024 ஜனாதிபதி வேட்பாளருமான, அல்ஹாஜ் டாக்டர் இல்யாஸ் அவர்கள் காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹும்களான ஐதுருஸ் பரியாரி, முஹம்மது பீபி ஆகியோரின் அன்பு மகனும், டாக்டர் சித்தி பாத்திமா அவர்களின் அன்புக் கணவரும், மர்ஹும்களான உம்முல் ஹைர், சௌதா பீவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், டாக்டர் இன்திகாப், ஜமீனா (முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர்), பஸ்மியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சட்டத்தரணி கமர்தீன், இன்ஜினியர் ஆஷிக் நிம்ரி, ஆயிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், கலாம் மாஸ்டர், மர்ஹும் அப்துல் காதர் ஆகியோரின் தாய்மாமனாரும், கதீஜா சமா, டாக்டர் காDதிம் சாதிக், ஆமினா ரஹ்மத், ருகைய்யாஹ் ரஹ்மத், அஹ்மத் மூஸா, இfப்fபாஹ், இமாத் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்! இன்று (23) வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையுடன் புத்தளம், பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
- தகவல் -
ஊடகவியலாளர் எம்.யூ.எம். சனூன்
No comments