Breaking News

புத்தளம் ஜெயா பார்ம் காற்பந்தாட்ட தொடர். ஆறாவது போட்டியில் புத்தளம் நகரின் பழைமை வாய்ந்த போல்டன் வெற்றி.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் காற்பந்தாட்ட லீக் புத்தளத்தில் தொடராக நடாத்தி வருகின்ற ஜெயா பார்ம் வெற்றிக்கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட தொடரின் ஆறாவது போட்டி ஒன்றில் புத்தளம் நகரின் மிக பழைமை வாய்ந்த போல்டன் கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


இந்த போட்டி சனிக்கிழமை (10) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


நாகவில்லு எருக்கலம்பிட்டி அணியும், புத்தளம் போல்டன் அணியும் இப்போட்டியில் சந்தித்தன. 


நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் போல்டன் அணி 01: 00 கோலினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.


கடந்த போட்டி போலவே இந்த போட்டியிலும் இரண்டு அணிகளுக்குமே புதிய இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்


போல்டன் அணியின் இளம் வீரர் எம்.ஆர்.எம்.சப்ரான் மற்றும் எருக்கலம்பிட்டி அணியின் இளம் வீரர் ஜே.எம்.பயாஸ் ஆகியோர் மைதானத்தில் தமது அபார திறமைகளை வெளிக்காட்டியதாக போட்டியை காண வருகை தந்திருந்த ரசிகர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


இந்த போட்டித் தொடரில் புத்தளம் நகரின் பிரபலமான அணிகள் அதிர்ச்சி தோல்வியோடு தொடரிலிருந்து வெளியேறியுள்ளதோடு பின் தங்கிய நிலையில் காணப்பட்ட அணிகள் அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம்.ஜிப்ரி, எம்.ஆர்.எம்.அம்ஜத், எச்.ஆர். ஹம்ருசைன், எம்.ஓ. ஜாக்கிர் ஆகியோரும், போட்டி ஆணையாளராக லீக் போட்டி தொடர்களின் ஒருங்கிணைப்பாளரும், லீக் நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஜெனூசனும் கடமையாற்றினர்.


ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா, லீக் உப தலைவரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ரனீஸ் பதியுதீன் உள்ளிட்ட லீக் உறுப்பினர்கள், புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் அதிபர் ஐ.எல் சிராஜுதீன், எக்ஸலன்ஸ் பாடசாலை அதிபர் எச்.அஜ்மல்,லெஜன்ட்ஸ் கழக ஸ்தாபகர் எம்.யமீன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



குறிப்பு:


ஆரஞ்சு நிற ஜேர்ஸி வெற்றி பெற்ற போல்டன் அணி.


சிவப்பு நிற ஜேர்ஸி 

எருக்கலம்பிட்டி அணி.






No comments

note