Breaking News

புத்தளம் ஜம்மியத்துல் உலமா கிளையின் இஸ்லாமிய கலாச்சார விழா

(நமது நிருபர்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலைக் கலாசார விழுமியங்களை மேன்மைபடுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை(10) ஸாஹிரா தேசிய பாடசாலையின் மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் மற்றும் நகர கிளையின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஹஸரத் அவர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி உட்பட அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மக்ஷ நகர கிளையின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் மின்ஹாஜ் இஸ்லாஹி  ஹஸரத் அவர்களை (சில முக்கிய காரணங்களால் அவரால் சமூகம் தர முடியாமல் போனது) அவருக்கு பகராமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் முன்னாள் உப தலைவர் அஷ்ஷேக் அஸீம் அர்ரஹமானீ அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் மற்றும் நகரக் கிளையின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் உட்பட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி, இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு (SLEAS) உள்வாங்கப்பட்ட ஏ.எம்.ஜவாத், எம். நௌசாத் ஆகியோருக்குமான நினைவுச் சின்னங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் மற்றும் நகரக் கிளையின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் உட்பட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.



















No comments

note