அல்ஹசனாத் ஜனாசா நலன் புரிச்சங்கம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் அல்ஹசனாத் ஜனாசா நலன் புரிச்சங்கம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் அல்ஹசனாத் மஸ்ஜிதில் கடந்த சில மாதங்களாக இந்த ஜனாஸா நலன் புரிச்சங்கம் தொடராக இயங்கி வந்தது.
எனினும் இதனை ஒரு உத்தியோகபூர்வ அமைப்பாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற பலரது வேண்டுகோளுக்கு இணங்க இதன் பொதுக்கூட்டம் புதன்கிழமை (28) இரவு புத்தளம் கெனல் வீதியில் அமைந்துள்ள அல்ஹனா மகளிர் சங்க கட்டடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
50 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இக்கூட்டத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் அங்கத்தவர் அப்துர் ரஷீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி), புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் சார்பாக ஆசிரியர் எம்.ஓ.ஜே.நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டு மேலதிக தெளிவுகளை வழங்கினர்.
இதன்போது அல்ஹசனாத் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் யாப்பும் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு புதிய நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
தலைவராக எம்.எம்.நிசாம்தீனும், செயலாளராக ஜே.எம்.இஹ்திசாமும், பொருளாளராக எம்.எம்.விசாமும் தெரிவு செய்யப்பட்டதோடு 09 அங்கத்தவர்களை கொண்ட நிர்வாக குழுவும் தெரிவாகியது.
No comments