ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்
புளிச்சாக்குளத்தைப் பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற அல்ஹாஜ் முபாரக் அவர்களின் அன்பு மனைவி ஹஜியானி உம்மு சுல்பா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் புளிச்சாக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான அல்ஹாஜ் வாவா தம்பி மரிக்கார் மற்றும் சம்சுன் நஹார் ஆகியோரின் அன்பு மகளும், அல்ஹாஜ் ரிஸ்வான் (City Export) ,பாத்திமா சஹானா, பாத்திமா சிபானா, பத்திமா ரிஸ்னா ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்ற ஜிப்ரி, அல்ஹாஜ் ஜவாத் ஆசிரியர் - (பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயம்), முகம்மத் அஸ்பாக் (புழுதிவயல்) மற்றும் பாத்திமா ஜெஸ்மினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலமஞ்சென்றவர்களான சாலிப் மரிக்கார், அல்ஹாஜ் உமர் மாஸ்டர், மற்றும் பீவி பாத்திமா,சித்தி உம்மா ,உம்மு சஹீதா அல்ஹாஜ் இக்பால், சைபுன் நிஸா ,சாதிக் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (05) இஷாத் தொழுகையுடன் விருதோடை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல்:- குடும்பத்தினர்.
No comments