Breaking News

கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் முன்னாள் அதிபர் அபுல் ஹசன் (ஹனீபா) மௌலவி யின் மறைவுக்கு பைசர் மரிக்கார் அனுதாபம்

(நமது நிருபர்)

கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் முன்னாள் அதிபர் அபுல் ஹசன் (ஹனீபா) மௌலவியின் மறைவுச் செய்தி ஆழ்ந்த கவலையளிக்கிறது.  கனமூலையின் மூத்த உலமாக்களில் ஒருவரான அபுல் ஹஸன் (ஹனீபா) மௌலவியின் மறைவு கனமூலை கிராமத்திற்கு மாத்திரமல்ல முழு அக்கறைப்பற்று பிரதேசத்திற்கும் ஈடுசெய்ய முடியாத மறைவாகவே கருதுகின்றேன். இவ்வாறு கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  கே.எம்.எம் பைஸர் மரைக்கார் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவரின் அனுதாபச் செய்தியில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,


இவர் ஆன்மீக ரீதியிலும், லௌஹீக ரீதியிலும் குறிப்பாக பள்ளி மாமா என்று அழைக்கக் கூடிய இவர் கனமூலையில் ஆரம்பக் குர்ஆன் மத்ரஸாக்களை நடாத்தி இன்று எம்மத்தியில் காணப்படும் உலமாக்களை உருவாக்கிய காரண கருத்தாவாகக்  காணப்படுகின்றார்.


அதேவேளை கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை  போன்றவற்றின் இஸ்லாமியப் பாட  ஆசிரியராக தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியதோடு, கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தை ஒரு உன்னதமான இடத்திற்கு கொண்டு வந்து அதனை ஒரு பொறுப்பான அதிபரிடம் முறையான திட்டங்களை வழிவகுத்து அத்திட்டங்கள் ஊடாக வெற்றி நடைபோடுவதற்கு காரணமாக இருந்தவர் மர்ஹும் அபுல் ஹஸன் (ஹனீபா) மௌலவி யாகும் அதுமாத்திரமல்லாமல் இவருடைய காலத்திலயே கனமூலை  பாடசாலை க.பொ.த. சாதாரண தரம் வரை தரம் உயர்த்தப்பட்டது. அப்பெருமை இவரையே சாரும்.


அன்னாரின் பிரிவு இந்த கனமூலை கிராமத்திற்கு மற்றுமன்றி அக்கறைப்பற்று பிராந்திய  கல்வி சமூகத்திற்கு ஒரு பாரிய இழப்பாகும். எனவும் மேலும் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.




No comments

note