Breaking News

புத்தளம் மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் மாவட்டத்தில் நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் கலந்து சிறப்பித்தார்.


புத்தளம் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுவதற்காக  காத்திருக்கும் 3000 மாணவர்களுக்கான விஷேட வழிகாட்டல் கருத்தரங்கு செயற்திட்டமொன்று தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களின் தந்தை செய்னுதீன் மரிக்கார் அறக்கட்டளை மூலமாக, ஆசிரியர் எம்.டீ.எம்.நபீல் தலைமையிலான ஒபெட்  அமைப்பின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி 10 முக்கிய நிலையங்களில் இக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறன. 


இதன் முதல் கட்டமாக புத்தளம் ஸாஹிரா ஆரம்ப  பாடசாலையில் முதலாவது வழிகாட்டல் கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வின் போது புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களை தூய தேசத்துக்காக இயக்கத்தின் தலைவர்  சந்தித்து நல்ல பல கல்விசார் ஆலோசனைகளை வழங்கினார். 


புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கல்வி சார் உதவிகளை செய்யும் நோக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 2024 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட செய்னுதீன் மரிக்கார் அறக்கட்டளையானது “புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், அவர்களுக்கு தகுதியான கல்வியைப் பெறுவதை உறுதிசெய்து, அவர்களின் வாழ்வை வளப்படுத்துதல், சிறந்த கல்விசார் எதிர்கால சந்ததியினரை உருவாக்குதல் “ என்ற எளிமையான இலக்கினை அடிப்படையாகக் கொண்டதாகும்.  


இத்தூய பணியை சிறந்த முறையில் தொடர்ந்து செல்வதற்கு  தூய தேசத்திற்கான இயக்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.










No comments

note