Breaking News

சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியில் "வஷி ஷொடோகன் கராத்தே டூ எசோஸியேசன்ஸ்" மாணவர்கள் பதக்கங்கள் அள்ளி குவித்து சாதனை.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

வென்னப்புவ நகரில் அண்மையில் நடைபெற்ற "SHUHARI JAPAN KARATE"   சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியில் "வஷி ஷொடோகன் கராத்தே டூ எசோஸியேசன்ஸ்" (WSKA) கராத்தே சங்கத்தை சேர்ந்த புத்தளம் பிராந்திய மாணவர்கள் அதிகளவான பதக்கங்களை அள்ளி குவித்து சாதித்துள்ளனர்.    


போட்டிகளில் பங்குபற்றிய WSKA கராத்தே சங்க மாணவர்களில் 06 மாணவர்கள்  தங்கப்பதக்கங்களையும், 09 மாணவர்கள் வெள்ளிப்பதக்கங்களையும்,      23 மாணவர்கள் வெண்கல பதக்கங்களையும் பெற்று சாதித்துள்ளனர்.


குறித்த இந்த மாணவர்கள் புத்தளம் பிராந்திய அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆவர்.


இவர்களுக்கான பயிற்சிகளை WSKA கராத்தே  சங்கத்தின் பிரதான போதனாசிரியர் எம்.பைரூஸ் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.













No comments

note