Breaking News

நுரைச்சோலை தேசிய பாடசாலை மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

நுரைச்சோலை தேசிய பாடசாலை மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை. கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான  மல்யுத்த போட்டியில் நுரைச்சோலை தேசிய பாடசாலையை சேர்ந்த முகம்மது சியாம் முகம்மது அர்ஹம் 71கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


இந்த வெற்றியின் மூலம் நுரைச்சோலை பாடசாலை வரலாற்றில் விளையாட்டுத்துறையில் முதல் தங்கப்பதக்கம் வென்று “தங்க மகன்” என்ற பெருமையையும் இவர் ஈட்டியுள்ளார். 


இவர் கடந்த 2023 ல் நடைபெற்ற போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையில் அதன் அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் கற்பிட்டி கல்விக்கோட்ட உடற்கல்வி பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஐ.எப்.பளீல், பாடசாலையின் உதவி மற்றும் பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.










No comments

note