Breaking News

திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள இருப்பவர்களுக்கான விஷேட கலந்துரையாடல்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், புத்தளம் எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் கேஸ்மோ  அமைப்பினால், திருமணம் முடிப்பதற்கு முன் ஒவ்வொரு வாலிபரும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் (24) புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியில் இடம்பெற்றது.


இந்த கலந்துரையாடலில் இது வரையும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாத புத்தளம் ஸாஹிரா தேசிய  பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் புத்தளம் மணல்குன்று பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வானது புத்தளம் கேஸ்மோ அமைப்பின் உறுப்பினர் முஹம்மது ரிம்ஷாத் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ. ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி), ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் கல்விக்குழு தலைவர் அஷ்ஷெய்க் எம்.டீ. ஸல்மான் (இஹ்ஸானி) மற்றும் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சார்பாக அஷ்ஷெய்க் நஸ்ருதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


"திருமணத்திற்கு முன்னரான உளவியல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள்" கூடிய விரைவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரும் கலந்து கொள்ள கூடிய வகையில் வெவ்வேறாக நடாத்தப்படவுள்ளன.


இவ்வாறான கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் மூலம் திருமண பந்தத்தை உளவியல் ரீதியாகவும், இஸ்லாத்தின் வெளிச்சத்திலும் விளக்குவதாக அமையும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ. ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) தெரிவித்தார்.









No comments

note