Breaking News

கொழும்பு வாக்குகளை பெறுவதற்காக குப்பைகளை அள்ளி புத்தளத்திற்கு அனுப்பும் ஜனாதிபதி ரணில் - ஊடக சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கொழும்பு குப்பைகள் மீண்டும் புத்தளம் அருவக்காட்டிற்கு கடுகதி ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை (25) அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முன்னாள் வடமேல் மாகாண சபை எஸ் எச் எம் நியாஸ் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளார்.


அதில் தெரிவிக்கப்பட்டதாவது; 


மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்ஷவினால் மேற்படி கொழும்பு குப்பைகள் அருவக்காட்டுக்கு கொண்டு வரும் குப்பைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் வந்த தல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்த காலத்தில் அமுல்படுத்தப்பட்டது.


அதே போல் தற்போது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் நிலையில் மீண்டும் இந்த குப்பைகள் கொழும்பில் இருந்து புத்தளம் அருவக்காட்டிற்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து புத்தளம் சுற்றுப்புறச் சூழலை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்ல எத்தனிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விற்கும் அரசுக்கும் புத்தளம் மக்கள் தமது முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதுடன் ஜனாதிபதி தேர்தல் அறிவித்துள்ள இக்கால கட்டத்தில் இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவ்வாறு இத்திட்டத்தை நிறுத்தாது தொடருமாயின் புத்தளம் மக்களுடன் ஒன்றிணைந்து ரயில் மறியல் போராடாமல் முன்னெடுப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




No comments

note