Breaking News

புத்தளம் ஜெயாபார்ம் வெற்றிக்கிண்ணம். கால் இறுதியில் போட்டியிட்ட புத்தளம் லிவர்பூல் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் உதைபந்தாட்ட லீக் புத்தளத்தில் தொடராக நடாத்தி வருகின்ற உதைப்பந்தாட்ட தொடரான ஜெயா பார்ம் வெற்றிக்கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான கால் இறுதி ஆட்டம் ஒன்றில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 

போட்டி நிறைவில் வெற்றியை தீர்மாணிப்பதற்காக இடம்பெற்ற பெனால்டி உதையில் லிவர்பூல் அணியின் இளம் கோல் காப்பாளர் 19 வயது நிரம்பிய என். முஹம்மது ஷராப், 100 வீதம் கோலாக செலுத்தப்பட்ட பவர் புல் இரு உதைகளை லாவகமாக தடுத்ததன் விளைவாக லிவர்பூல் அணிக்கு இந்த அதிஷ்ட வெற்றி கிடைத்துள்ளது.


ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்கி வருகிறார்.


இந்த பரபரப்பான கால் இறுதி ஆட்டம் சனிக்கிழமை (24) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


புத்தளம் லிவர்பூல் அணியும், கற்பிட்டி பேர்ள்ஸ் அணியும் இந்த கால் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன.


போட்டி ஆரம்பம் முதல் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 03 கோல்களை பெற்றுக்கொண்ட தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது.


லிவர்பூல் அணிக்காக எம்.எம்.முஸக்கிர் இரு கோல் களையும், எம்.என்.எம்.ஆஷிக் ஒரு கோலினையும் பெற்றுக் கொடுத்தனர்.


பேர்ள்ஸ் அணிக்காக எம்.எச்.ரிஜ்வான் ஒரு கோலினையும், எம்.எப்.எம்.அஹாதிர் 02 கோல்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


வெற்றியை தீர்மாணிப்பதற்காக இடம் பெற்ற பெனால்டி உதையில் லிவர்பூல் அணி 03 : 01 கோலினால் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


போட்டிக்கு நடுவர்களாக எம்.ஏ.எம்.பஸ்ரின், எஸ்.எம்.ஜிப்ரி, ஏ.ஓ.அஸாம், ஏ.ஏ.கியாஸ் ஆகியோரும், போட்டி ஆணையாளராக புத்தளம் உதைபந்தாட்ட லீக்கின் நிறைவேற்று குழு உறுப்பினரும், சுற்றுப்போட்டி களின் இணைப்பாளருமான எம்.ஜெனூசனும் கடமையாற்றினர்.


லிவர்பூல் கழக முகாமையாளர் எச்.எச்.ஹம்ருசைன் அணியை வழி நடாத்தி இருந்ததோடு வீரர்களுக்கான பயிற்சியினை லிவர்பூல் கழக முன்னாள் வீரர்களும், காற்பந்தாட்ட லீக்கின் மத்தியஸ்த்தர் சங்க உறுப்பினர்களுமான எம்.ஐ.எம்.அலி மற்றும் எம்.ஓ.ஜாக்கிர் ஆகியோர் வழங்கி இருந்தனர்.


பெனால்டி உதையில் லிவர்பூல் அணியை வெல்ல வைத்த இளம் கோல் காப்பாளர் ஷராபை லிவர்பூல் ஆதரவாளர்கள் தோலில் சுமந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.












No comments

note