Breaking News

கற்பிட்டியில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான அரசியல் இடைவெளியை நிரப்புவது தொடர்பான தூய தேச கட்சியின் சிநேகபூர்வ சந்திப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இளைஞர்களுக்கான அரசியல் இடைவெளியை நிரப்புவதற்கு தூய தேச கட்சியின்  முன்னெடுப்புகள் என்ன, மிக நீண்ட காலமாக  இளைஞர்களின் அரசியல் வரவை தடை போடும்  மூத்த அரசியல்வாதிகள் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க தயாரில்லை என்பதனால் இளைஞர்களுக்கான அரசியல் பாதையை தூய தேச கட்சி எவ்வாறு வழி அமைத்துக் கொடுக்கும் அதற்கான முன்னெடுப்புகள் தொடர்பான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று கற்பிட்டி இளைஞர்களுக்கிடையில் தூய தேச கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர்  மொஹமட் ஹஸ்லான் தலைமையில் இடம்பெற்றது.


சிநேக பூர்வமான நட்பு ரீதியான அரசியல் கலந்துரையாடலாக இடம்பெற்ற இந்நிகழ்வில் தூய தேச கட்சியின் தலைவர் இஷாம்  மரைக்கார் கலந்து கொண்டு தூய தேச கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளையும், திட்டங்களையும்  இளைஞர்களோடு பகிர்ந்து கொண்டார்.


புதிய இளம் தலைமுறையினரும் இளைஞர்களும் எம்மோடு கைகோர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோம். இதுவரை ஜனாதிபதி தேர்தல் பற்றிய எந்தவிதமான தீர்மானங்களோ ஆதரவு பற்றிய பேச்சுவாரத்தைகளோ நாங்கள் முன்னெடுக்கவில்லை ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய நல்ல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் மக்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பற்றி விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.









No comments

note