கப்பலடி பாடசாலையில் இடம்பெற்ற பணி நலன் பாராட்டு விழா
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ. எம் சனூன்)
கப்பலடி அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக இடம்பெற்ற பணி நலன் பாராட்டு விழா வியாழக்கிழமை (22) பாடசாலையின் அதிபர் எம் ஜீ.எம் சறூக் தலைமையில் இடம்பெற்றது.
கவிப்புயல் சுஹைல் ஆசிரியரின் வாழ்த்து கவி வரிகளுடன் ஆரம்பமான பணி நலன் பாராட்டு விழா கப்பலடி பாடசாலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். பாடசாலையின் அதிபர் எம்.ஜீ.எம் சறூகின் வரவேற்புடன் தமிழ் மொழி தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளின் பாவோதல் மற்றும் இசையும் அசைவும் நிகழ்ச்சிகள் இந்நிகழ்விற்கு மேலும் மெருகூட்டியது. அத்தோடு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கிய ஆசிரியர் ஏ.பீ.இந்திராணி மெடில்டா பெற்றோர்களின் பாராட்டையும் பெற்றார்.
கப்பலடி அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆசிரியராக இணைந்து அதிபராக பதவி ஏற்று பாடசாலையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் சுமார் 15 வருடங்களாக அரும் பணியாற்றி இடம் மாற்றம் பெற்று சென்ற அதிபர் எம்.எம்.எம் நவ்ப் அத்தோடு 14 வருடங்களாக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர் ஏ டப்யூ.எம் றிஸ்வான் மற்றும் 13 வருடங்களாக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர் எம்.சீ.எம் நஜாத் ஆகிய மூவரினதும் பணி நலனை கவி வரிகளால் பாராட்டிய விதம் பலரது பாராட்டையும் பெற்றதுடன் பாடசாலை நிர்வாகத்தினராலும் பெற்றோர்களாலும் மூவருக்கும் பரிசு பொருட்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments