Breaking News

புத்தளம் ஜெயா பார்ம் காற்பந்தாட்ட தொடர். அல் அஷ்ரக் அணி வெற்றி.

(புத்தளம்எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் காற்பந்தாட்ட லீக் புத்தளத்தில் தொடராக நடாத்தி வருகின்ற ஜெயா பார்ம் வெற்றிக்கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட தொடரின் ஐந்தாவது போட்டி ஒன்றில் புத்தளம் அல் அஷ்ரக் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


இந்த போட்டி வெள்ளிக்கிழமை (09) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


புத்தளம் ட்ரிபல் செவன் அணியும், அல் அஷ்ரக் அணியும் இப்போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின.


போட்டியில் பங்கேற்ற இரண்டு அணிகளுக்குமே புதிய இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்ததால் போட்டி நிறைவு பெறும் வரைக்கும் ஆட்டம் மிக விறுப்பாகவே இடம்பெற்றது.   


இதனால், நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுக்கும் எவ்வித கோல்களையும் பெற முடியாமல் போனதால் போட்டி சமநிலையில் முடிந்தது.


எனவே வெற்றியை தீர்மானிப்பதற்காக இடம்பெற்ற பெனால்டி உதையில் அல் அஷ்ரக் அணி 03 : 02 கோல்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.


ட்ரிபல் செவன் அணிக்காக புதிய கோல் காப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இளம் வீரர் எல்.எம்.நுஸ்ரான், அல் அஷ்ரக் அணியின் புதிய இளம் வீரர் 09 ம் இலக்கம் 18 வயது நிரம்பிய முஹம்மது நிஷாக் ஆகியோர் ஆட்டத்தின் போது சிறந்த முறையில் செயலாற்றி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர்.


போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம்.இனாஸ்,

எம்.ஐ.எம்.அலி,எம்.எஸ்.எம்.நௌபி, எம்.ஹிஜாஸ் ஆகியோரும், போட்டி ஆணையாளராக லீக் போட்டி தொடர்களின் ஒருங்கிணைப்பாளரும், லீக் நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஜெனூசனும் கடமையாற்றினர்.


ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா, லீக் உப தலைவரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ரனீஸ் பதியுதீன், லீக் உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



குறிப்பு:


சிவப்பு கறுப்பு நிற ஜேர்ஸி ட்ரிபல் செவன் அணி.


வெள்ளை நீல நிற ஜேர்ஸி அல் அஷ்ரக் அணி.








No comments

note