Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் நகர முன்னாள் இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்ரக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

புத்தளம் எம்.யூ.எம். சனூன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் நகர முன்னாள் இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்ரக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.


கட்சியின் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அவர் மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்டார்.


இதன்போது கருத்து தெரிவித்த அவர், 


புத்தளம் மாவட்ட மக்களின் நன்மை கருதியும், தமது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு அமையவுமே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும் தெரிவித்தார்.


சிறுபான்மை மக்களில் கரிசனைகொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உழைத்து வருவதை தாம் உணர்ந்துள்ளதாகவும் எதிர்காலத்தில், கட்சியையும் தலைமையையும் பலப்படுத்த தன்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.


தற்போதைய காலகட்டத்தில், இவ்வாறான கட்சி ஒன்றே நமது சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


எம்.என்.எம்.நஸ்ரக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் இளைஞர் அமைப்பாளராக இருந்த காலத்தில் முன்னாள் புத்தளம் நகர பிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் பங்கேற்ற அரசியல் மேடைகளில் மேடை பேச்சாளராக அறிமுகமாகி பின்னர் கட்சியின் சிறந்த பேச்சாளராக மாறி இருந்ததோடு அவர் ஒரு சிறந்த கவிஞரும் ஆவார்.





No comments