Breaking News

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் (12) திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் கிளை மற்றும் மாவட்டத்தின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் தலைவர் அஷ்ஷேக் தமீம் (ரஹ்மானி) ஆகியோரின் கரங்களால் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர் அஷ்ஷேக் ஆதீப் (ரஹ்மானி) கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்.


அதனை தொடர்ந்து தலைமை உரை வரவேற்புரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) அவர்களால் நடத்தப்பட்டது. விசேட உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின்  மற்றும் மாவட்டத்தின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.


அதனை தொடர்ந்து சிறப்புரை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீமினால் நிகழ்த்தப்பட்டது.


நன்றியுரையினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர் அஷ்ஷேக் ஷாபி (ஸஹ்தி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


சிறப்பு அதிதிகளாக ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹிர், ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.ஆர்.எம்.சலீம், ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ. நஜீம், ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எஸ்.ஆர்.முஹ்ஸி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் செயலாளர் அஷ்ஷேக் அப்துர் ரசீத், அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் செயலாளர் ஆசிரியர் பதீன், நகர சபையின் நிர்வாக அதிகாரி நெளசாத், புத்தளம் வர்த்தக சங்கத்தின் உறுப்பினர் ஏ.எம்.ஹிஷாம் ஹுசைன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் "மாஸ்டர் மொபைல்" நிறுவனத்தின் உரிமையாளர் எம். அஸ்பி,  ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளைக்கு மைக் செட் ஒன்றையும் அன்பளிப்பு செய்தார்.




















No comments

note