Breaking News

புத்தளம் மாவட்டத்தில் 663,673 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

2024 ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 663,673 வாக்காளர்கள்  தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தெரிவித்துள்ளார் 


இதன்படிபுத்தளம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளான புத்தளத்தில் 174,159 பேரும், ஆனமடுவையில் 133,202 பேரும், சிலாபத்தில் 134,178 பேரும், நாத்தாண்டியவில் 103,847 பேரும், வென்னப்புவயில்  118,286 பேரும் தகுதி பெற்றுள்ளனர் .


மேலும் தபால் மூலம்  விண்ணப்பங்களின் எண்ணிக்கை 15,270. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 14,967 எனவும், 303 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்


அதன்படி, தபால் மூல வாக்களிக்கும் தேதிகள் பின்வருமாறு.


மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறை - 04.09.2024 அன்றும் ஏனைய நிறுவனங்களுக்கு 2024 செப்டம்பர் 05 ம் 06 ம் திகதிகள் எனவும் தபால் மூல வாக்குகளுக்கு மாற்று திகதிகளாக 2024 செப்டம்பர் 11 ம் மற்றும் 12 ம் திகதிகள்  எனவும்


அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் 470 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன எனவும் வாக்கு எண்ணும் நிலையங்களாக பாத்திமா பெண்கள் பாடசாலை மற்றும் சென் அண்ட்ரூஸ் பாடசாலை என இரண்டும் ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும் 54 வழக்கமான வாக்கு எண்ணும் மையங்களும் 08 தபால் வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மேலும் தெரிவித்தார்.




No comments

note