சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற 640 கையடக்க தொலைபேசிகளுடன் ஒருவர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஏ.ஏ.காஸிம்
நேற்றிரவு கல்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த கெப் வண்டியொன்றை கரம்பே சோதனைச் சாவடியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் தடுத்து நிறுத்திய போது, சுமார் 650 கையடக்கத் தொலைபேசிகளைக் கண்டுபிடித்து சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.
இந்த கையடக்க தொலைபேசிகள் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அனுராதபுரம் ககிராபை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் நுரைச்சோல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
No comments