Breaking News

2024 உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

உளவியல் பாட நெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூர  Iconic Awards Sri Lanka - 2024 விருதினை பெற்றுக்கொண்டது.


குறித்த நிகழ்வுகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ( BMICH) அண்மையில் மிகவும் விமரிசையாக  நடைபெற்றது.


இந்த  நிறுவனத்துக்கான விருதினை அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார்  பெற்றுக்கொண்டார். 


விருதினை  பெற்றுக்கொண்ட அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 


"அமேசான் கல்லூரி நிறுவனமானது 2009 ஆம் ஆண்டு தொடக்கம்  இன்று வரை சுமார் 15 வருடங்களாக பல கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதுடன், மாணவர்களின் நன்மையை கருத்தில் கொண்டு பல்வேறுபட்ட புலமைப்பரிசில்  திட்டங்கள் மற்றும் வறிய மாணவர்களுக்கான சலுகை அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பல வழிவகைகளை ஒழுங்குபடுத்தி கொடுக்கின்றன.


அமேசான் கல்லூரி Diploma, HND, Degree, Masters, PhD வரையிலான பாட நெறிகளுடன்,Business Management, Psychology, Counselling, Teacher Training, Caregiver, Childcare, IELTS, English போன்ற பாடநெறிகளுக்கு  முதலிடம் வழங்கப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால்  வகுப்புகள் நடத்தப்படுகிறது.


இது வரை எமது நிறுவனத்திற்கு 5 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விருது எமக்கு கிடைத்த ஆறாவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு வருடமும் எமது நிறுவனத்தின் மூலமாக வெற்றிகரமாக கல்விநடவடிக்கைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு பிரமாண்டமான முறையில் BMICH இல்  பட்டமளிப்பு விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும் .


இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும்  நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்க பலமாக உள்ள நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.




No comments

note