Breaking News

ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)

ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17 ஆம் திகதி சனிக்கிழமை (17.08.2024)  கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


ஆறு மாதம் மற்றும் ஒருவருடக் கற்கைகளைக் கொண்ட  பள்ளிவாயல் இமாம்களை வலுப்படுத்தும் VIP பாடநெறி, சமூக மற்றும் மத தலைவர்களுக்கான “சங்கல்ப“ பாடநெறி, கல்வித்துறை நிர்வாகிகளுக்கான Mini MBA பாடநெறி,  இஸ்லாம் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குறித்த அடிப்படை அறிவை வழங்கும் BISற பாடநெறி,  அரபுக் கலாசாலைகளில் இறுதி வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஆளுமை விருத்திக்கான  ECTS பாட நெறி ஆகிய ஐந்து பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 300 இற்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்வில் பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள்  பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் மொரகொல்லாகம  உபரத்தன தேரர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாளர் கலாநிதி. ஏ. அஸ்வர் அஸாஹிம் (அல் அஸ்ஹரி), அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சஞ்சீவ விமல குணரத்ன, சர்வோதய அமைப்பின் தலைவர் டாக்டர் வின்யா ஆரியரத்ன, மெத்தடிஸ்ட் திருச்சபையின் முன்னாள் தலைமை பேராயர் ஆசிரி பெரேரா, உலமாக்கள், சர்வ மதத்தலைவர்கள், சமூக தலைவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







No comments

note