Breaking News

புத்தளத்தில் புதிதாக கல்வி நிர்வாக சேவைக்கு ( SLEAS) தெரிவான ஏ.எம். ஜவாத் பற்றிய ஒரு நோக்கு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஏ.எம். ஜவாத் கற்பிட்டிப் பிரதேசத்தில், எம்  எம் அபூபக்கர்  மற்றும் எச்.எம் மர்யம் பீவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர். தனது ஆரம்பக் கல்வியை, கற்பிட்டி அல் - அக்ஸா தேசிய பாடசாலையில் கற்றார் .


ஏ.எம் ஜவாத், 1990 ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் தனது முதல் நியமனத்தை  பெற்றுக்கொண்டார்.


ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலேயே பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வர்த்தகத்துறையில் உயர்கல்வியை தொடர்ந்த ஏ.எம் ஜவாத்  1994 ம் ஆண்டு வணிகமானிப் பட்டதைப் பெற்றதுடன் 1995 ம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனத்தில், ஆரம்பக் கல்வித் துறையில்  ஆசிரியர் பயிற்சி நெறியினையும் பூர்திசெய்தார். 


1990 ஆம் ஆண்டு முதல் 1997 ம் ஆண்டு வரை 7 வருடங்கள் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய ஏ  எம் ஜவாத்  1997 முதல் 2002 ம் ஆண்டு வரை 5 வருட காலம்  புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் தனது பட்டப் பின் கல்வி டிப்ளமோ பாடநெறியையும் நிறைவு செய்தார். இதே காலப்பகுதியில் 

2000 ம் ஆண்டு தொடக்கம்  2002 ஆம் ஆண்டு வரையான இரு வருட  காலப்பகுதியில் ஆசிரிய ஆலோசகராகவும் அவர் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்க விடயம்.


2002 ஆம் ஆண்டு முதல் புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பதில் அதிபராக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட இவர், சுமார் 7 வருடங்கள் அங்கு பணியாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில், 2006 ஆம் ஆண்டில், இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தரத்துக்கு உள்வாங்கப்பட்டார். 


அதனைத் தொடர்ந்து 3 வருடங்கள் புத்தளம் அசன்குத்தூஸ் வித்தியாலயத்திலும், 5 வருடங்கள் கல்கமுவ மாதிரிப் பாடசாலையிலும் சேவையைத் தொடர்ந்த ஏ.எம் ஜவாத்  2012 ம் ஆண்டு தனது பட்டப் பின்  கல்வி முகாமைத்துவ டிப்ளோமோ பாடநெறியை, பாதுக்க - மீபேயில் அமைந்துள்ள தலைமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில்(Center for Leadership development) நிறைவு செய்தார். அத்ததுடன்,  2015 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்துக்கும் பதவி உயர்வும் பெற்றார்.


2018  ம் ஆண்டு முதல் புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 3 வருடங்களும், 2021 ம் ஆண்டு முதல் புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலையில் 3 வருடங்களும் அதிபராக கடமையாற்றியுள்ளார்.


சிறந்த அதிபருக்கான விருதுகளை 1995 ம் 2015 ம் ஆண்டுகளில் இருமுறை ஏ.எம் ஜவாத் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




No comments

note