கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் முப்பெரும் விழாவில் ஆளுநர் நஸீர் அஹமட், பா.உ அலி சப்ரி ரஹீம்.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்ற பிரதான நுழைவாயில் மற்றும் உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டுதல் அத்தோடு அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு என்ற மகுடத்தின் கீழ் கற்றல் உபகரணம் வழங்கும் முப்பெறும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை (16) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் அஹமட் நஸீர் , விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலையின் அதிபரினால் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட. பாடசாலையின் விளையாட்டு மைதான புணரமைப்பு கோரிக்கையை கவனத்தில் எடுப்பதாகவும் தனது பதவி காலத்திற்குள் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து சகல வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானமாக புனரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
இதில் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.எம் இன்பாஸ், ஐ.தே.க. கற்பிட்டி நகர அமைப்பாளரும் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவருமான ஜே.எம் தாரிக், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.கே.எம் அலாவுதீன், எம். அஸ்லம், பாராளுமன்ற உறுப்பினரின் கற்பிட்டி இணைப்பாளர் யூ.எம் ஜின்னா மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ் எப் சாஜீனாஸ் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ஆளுநருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் பாடசாலை நிர்வாகத்தினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments