சதுரங்க போட்டியில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய நான்கு மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு
(நமது நிருபர்)
புத்தளம் வலய மட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற 2024 ம் ஆண்டிற்கான சதுரங்க போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் எம்.என்.எம் நுஸைக், எம்.என் எம் நுஸைட், எம்.டி தகீ உஸ்மான் மற்றும் எம்.ஐ.எப் இப்றா ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் எம்.எப் பௌஸ் மற்றும் எம்.ஐ.எம் இபாம் ஆகிய இருவரும் புத்தளம் வலய மட்டத்தில் சான்றிதழ்களை பெற்று பாடசாலைக்கும் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளதோடு இவர்கள் அணைவரும் கனமூலை சுப்பர் நைட் செஸ் கிளப் (Super Knight Chess Club) அங்கத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments