Breaking News

வடமேல் மாகாண ஆளுனரின் வாராந்த பொதுமக்கள் சந்திப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்களின் வாராந்த பொதுமக்கள் சந்திப்பு (10) வடமேல் மாகாண சபையின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது வடமேல் மாகாணத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்த பொதுமக்களின் அரசாங்க தொழில் இடமாற்றங்கள், காணிப்பிரச்சினைகள், வேலைவாய்ப்பு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான சிக்கல்களுடன் ஆளுனரை நாடி வந்திருந்த பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


ஆங்கில உயர் டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களை ஆங்கில ஆசிரியர்களாக நியமித்தல், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை சீராக முன்னெடுத்துச் செல்லும் வகையில் இடமாற்றங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் குறித்து ஆளுனர் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்கு தேவையான பணிப்புரைகளை விடுத்தார்.

 

குறித்த பொதுமக்கள் சந்திப்பில் மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே. குணரத்தின, ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன், பிரதம அமைச்சின் செயலாளர் நயனா காரியவசம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







No comments

note