கோட்ட மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஏழு முதலிடங்கள்
( கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
இம்முறை இடம்பெற்ற கோட்ட மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஏழு மாணவர்கள் முதலாம் இடங்களையும் மூன்று மாணவர்கள் இரண்டாம் இடங்களையும் நான்கு மாணவர்கள் மூன்றாம் இடங்களையும் பல்வேறு போட்டிகளில் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் பீ.எம் முஸ்னி தெரிவித்துள்ளார்.
இதன்படி தரம் 13 ஐச் சேர்ந்த ஏ.அர் அம்ரா மற்றும் தரம் 11 ஐச் சேர்ந்த கே எப் சமீஹா ஆகிய இருவரும் பார்த்தெழுதல் போட்டியிலும் தரம் 11 ஐச் சேர்ந்த என்.எப் ரீமா சொல்வளம் போட்டியிலும் தரம் 11 ஐச் சேர்ந்த எஸ்.எப் சஸ்மின் , தரம் 10 ஐச் சேர்ந்த எம்.ஐ.எப் சர்ஹா , மற்றும் தரம் 05 ஐச் சேர்ந்த எம்.எப் சபியா ஆகியோர் கவிதை போட்டியிலும் , தரம் 11 ஐச் சேர்ந்த எப். பர்வீஸ் எழுத்தாக்கம் போட்டியிலும் முதலாம் இடங்களை பெற்றுக் கொண்டதுடன்
மேலும் தரம் 09 ஐச் சேர்ந்த ஐ.எம் சதா பார்த்த எழுதல் போட்டியிலும் தரம் 11 ஐச் சேர்ந்த எம்.என்.எப் ரீமா சேர்த்தெழுதல் போட்டியிலும் தரம் 11 ஐச் சேர்ந்த எப். இபா ஆங்கில பேச்சு போட்டியிலும் இரண்டாம் இடங்களை பெற்றுள்ளதுடன்
இன்னும் தரம் 08 ஐச் சேர்ந்த எம்.எப் அம்ரா பார்த்தெழுதல் போட்டியிலும் , தரம் 11 ஐச் சேர்ந்த எம்.என் அப்ரா சொல்வளம் போட்டியிலும், தரம் 09 ஐச் சேர்ந்த ஐ.எம் இஹ்மா மற்றும் தரம் 03 ஐச் சேர்ந்த எம்.எப் அனீகா ஆகிய இருவரும் கவிதை போட்டியிலும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இவர்களின் இவ் வெற்றிக்கு அயராது துணை நின்று ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களான எம்.டி சர்மிலா சீனத், எம்.எப் சப்வானா, எம்.எம்.எப் சாதிகா ஆகியோருக்கு கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நிர்வாகம் மற்றும் உப அதிபர் எம்.எப்.எம் நௌசாத் பிரதி அதிபர் ஐ.என்.எம்.எம் லாஹீர் ஆகியோர் சார்பாக தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் அதிபர் பீ.எம் முஸ்னி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments