புத்தளம் மஸ்ஜிதுகளின் வரலாற்றில் முன்மாதிரிமிக்க நிகழ்வு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் மஸ்ஜித்களின் வரலாற்றில் முதன் முறையாக அண்மையில் புத்தளம் ஆர்.எஸ்.மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் தன்னார்வத் தொண்டர்களை சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தளத்தின்
பல்வேறு பிரபலங்கள் அதிதிகளாக கலந்து கொண்டதோடு தன்னார்வ தொண்டு அங்கத்தவ மாணவர்களுக்கு நினைவு சின்னங்களை வழங்கி வைத்தனர்.
தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் பரிபாலன சபை செயலாளரும், இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் தலைவருமான எம்.ஆர்.எம்.ஷவ்வாபின் வழிகாட்டலில் குறித்த தன்னார்வ தொண்டர்கள் மஸ்ஜிதில் மேற்கொள்ளப்படும் சிரமதான பணிகள் உள்ளிட்ட கல்வி மேம்பாடு, சுகாதார செயற்திட்டங்களுக்கு முன்நின்று பக்கபலமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments