புத்தளம் கொத்தாந்தீவு இபாதுர்ரஹ்மான் அரபுக் கல்லூரி மாணவன் முஹம்மது நாஸிக் முஹம்மது அம்ஹர் கிராஅத் போட்டியில் இரண்டாமிடம்
வட, வடமேல் மற்றும் வடமத்திய மாகாண அரபுக் கல்லுரிகளுக்கிடையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் குர்ராஃ ஏற்பாட்டில் அண்மையில் (06) நடைபெற்ற கிராஅத் போட்டியில் 15 ஜுஸ்உ பிரிவில் புத்தளம் கொத்தாந்தீவு இபாதுர்ரஹ்மான் அரபுக் கல்லூரி மாணவன் முஹம்மது நாஸிக் முஹம்மது அம்ஹர் இரண்டாமிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
தில்லையடி முஹாஜிரீன் மத்ரஸாவில் நடைபெற்ற மேற்படி போட்டியில் குறித்த மாணவன் இரண்டாமிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகி கொத்தாந்தீவு மண்ணுக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த மாணவனுக்கும், அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்றுவித்த உஸ்தாத்மார்களுக்கும் கொத்தாந்தீவு ஊர் மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments