குறிஞ்சிப்பிட்டியில் இடம் பெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவில் புதன்கிழமை (24) இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று குறிஞ்சிப்பிட்டி வடக்கு அபிமானி மகளீர் சங்கத்தின் காரியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் அஸ்கர் தலைமையில் இடம் பெற்றது.
இவ் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் வடமேல் மாகாண ஆயுர்வேத மத்திய நிலையத்தின் வைத்தியர் பர்சானா கலந்து கொண்டார்.குறிஞ்சிப்பிட்டி வடக்கு அபிமானி மகளீர் சங்க அங்கத்தவர்கள் மற்றும் குறிஞ்சிப்பிட்டி கொளனி மக்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது நோய்களுக்கான மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டனர். உடல் என்பது உலக ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாகும் இதன் அடிப்படையில் குறிஞ்சிப்பிட்டி வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தரின் திட்டமிடலில் இவ் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments