Breaking News

குருநாகல் மாவட்ட “உருமய” காணி உறுதி வழங்கும் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில் உருவான , காணியற்றவர்களுக்கான “உருமய” காணி உறுதி வழங்கும் நிகழ்வு குறித்து இன்று (01) வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


“உருமய” காணி உறுதி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் செயற்பாட்டின் கீழ் குருநாகல் மாவட்ட பயனாளிகளுக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 05ம் திகதி, குருநாகல் நகரில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது


குறித்த கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட ஆளுநர் நஸீர் அஹமட்  “உறுமய” காணி உறுதி வழங்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துவது தொடர்பில் இதற்கு முன்னரும் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தோம்.


அதன் அடிப்படையில் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதேச செயலகங்கள் தோறும் விசேட பயிலுனர்களையும் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தோம். ஏனெனில் “உறுமய” செயற்திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தப்படவேண்டிய ஒரு திட்டமாகும். 


தற்போதைக்கு எமது துரித செயற்பாடுகளின் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து இருநூறு பயனாகளிள் “உறுமய” காணி உறுதி வழங்கும் நிகழ்வின் கீழ் தங்கள் காணிகளுக்கான உறுதிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஏனைய பயனாளிகளுக்கும் இதன் கீழ் காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.


ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே இந்த “உறுமய” காணி உறுதிகள் வழங்கப்படுகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலையில் இவ்வாறான எந்தவொரு செயற்திட்டமும் சாத்தியப்பட்டு இருக்காது. ஆனாலும் ஜனாதிபதியின் தூரநோக்கான செயற்திட்டத்தின் ஊடாக அது சாத்தியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 


குறித்த கலந்துரையாடலில் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் சமன்பிரிய ஹேரத் எம்.பி., மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே குணரத்ன, மாவட்ட அரசாங்க அதிபர் ரத்நாயக்க உள்ளிட்ட  மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









No comments

note