புத்தளம் கஜுவத்த முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற "முஹர்ரம்" இஸ்லாமியப் புதுவருடக் கொண்டாட்டம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எமா.யூ.எம் சனூன்)
புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரம் சிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இன்று 11.07.2024 வியாழக் கிழமை பாடசாலையின் அதிபர் அஷ்ஷைக் இஸட்.ஏ சன்ஹீர் தலைமையில் மாணவர்களின் களிகம்பு வரவேற்புடன் ஆரம்பமானது.
பிரதி அதிபர் அஷ்ஷைக் எம்.எஸ்.எம். பாஸில் மற்றும் பாடசாலையின் ஆசிரிய குழாமால் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments