Breaking News

கற்பிட்டியில் தடைபட்ட மோட்டார் குரோஸ் பந்தயம் தேசிய ரீதியின் பிரபல மோட்டார் குரோஸ் வீரர்களின் பங்குபற்றுதலுடன்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி கே.ஆர்.சீ அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா ரேஸீங் கழகத்தின் பூரண அணுசரனையில் கற்பிட்டியில் மாபெரும் தேசிய  ரீதியிலான பிரபல  மோட்டார் சைக்கிள் வீரர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற உள்ள மாபெரும் மோட்டார் குரோஸ் பந்தயம் எதிர்வரும் 2024/08/04 ம் திகதி பிற்பகல் 01 மணிக்கு கற்பிட்டி தேத்தாவாடி ரேஸ் மைதானத்தில் இடமபெற உள்ளது.


நீண்ட  நாட்களாக பல்வேறு தடைகளால் இடைநிறுத்தப்பட்ட கற்பிட்டி மோட்டார் குரோஸ் பந்தயம் கற்பிட்டி கே.ஆர்.சீயின் தலைவர் ஜே.எம் தாரீகின் பாரிய முயற்சியினால் நுவரெலியா ரேஸீங் கழகத்தின் பூரண அணுசரனையில் நடைபெற உள்ள மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் பங்குபற்றுபவர்கள் அதன் கூட்டமைப்பில் பதிவு செய்யப்படுவதுடன் அனுமதி பத்திரமும் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும். இதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் புதன்கிழமை 2024/07/17 ம் திகதி கற்பிட்டியில் நடைபெற உள்ளது எனவும் கற்பிட்டி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கு பற்ற விருப்பம் உடையவர்கள் அணைவரும் தவறாது எதிர்வரும் புதன்கிழமை முன்பாக விண்ணப்பத்தினை பூரணப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கே.ஆர்.சீ அமைப்பின் தலைவர் ஜே.எம் தாரீக் தெரிவித்துள்ளார் .




No comments

note