Breaking News

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் முத்தமிழ் மன்ற தொகுதி திறப்பு விழா.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

2016 ஆம் ஆண்டு தற்காலிக இடம் ஒன்றில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட சாஹிரா தேசிய கல்லூரியின் முத்தமிழ் மன்றம், ஓரிரு வருடங்கள் ஒழுங்கான ஓட்டத்துடன் செயல்பட்டாலும் கால ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகளால் ஸ்தம்பித்துப் போனது. 


இருந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மொழிக்கு உயிரூட்டிய, உயிரூட்டிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் பெருந்தகைகளின் அயராத முயற்சியில், பழைய மாணவர் சங்க செயலாளர் ஏ.டபில்யூ. நஸீபின் செயலூக்கத்தின் விளைவால் புத்தளம் வை.எம்.ட்ரவல்ஸ் அனுசரணை வழங்க, புதிய பரிமாணத்துடன் அழகிய கட்டமைப்பில் மீண்டும் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 


கல்லூரியின் அதிபர் ஐ.ஏ. நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வை.எம்.ட்ரவல்ஸ் உரிமையாளர் உள்ளிட்ட  அழைப்பு விடுக்கப்பட்ட அத்தனை பேரும் சமூகம் தந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும் .


2016ல் இருந்து செயல்படுத்தப்பட்ட சகல வேலைத் திட்டங்களும் அவ்வப்போது மன்றத் தலைவர்களாக இருந்த ஆசிரியர்களால் சிறப்பாக எழுத்துருவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.









No comments

note