Breaking News

புத்தளம் சிங்கிதி முன்பள்ளி மாணவர்களின் எசல பெரஹர ஊர்வலம்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் குருநாகல் வீதி வில்லுவ வத்த சிங்கித்தி முன்பள்ளி மாணவர்களின் எசல பெரஹர ஊர்வலம் வெள்ளிக்கிழமை (19) மாலை நடைபெற்றது.


பௌத்த மதத்தின் வரலாற்றினை எடுத்தியம்பும் எசல போயா தினத்தினை முன்னிட்டு இந்த பெரஹர ஊர்வலம் ஏற்பாடாகி இருந்தது.


முன்பள்ளி ஆசிரியை அமிதா எதிரிசிங்க மற்றும் உதவி ஆசிரியைகளின்  வழிகாட்டலில் முன்பள்ளியில் கல்வி பயிலும் 50 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.


குருநாகல் வீதியிலிருந்து ஆரம்பமான இந்த பெரஹர ஊர்வலம் புத்தளம் சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் நிறைவடைந்தது.


புத்தளம் ஸ்ரீ விசுத்தாராம விகாரையின் விகாராதிபதி மஹகம சுதஸ்ஸி ஹிமி அவர்களிடம், எசல பெரஹர ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததையிட்டு முன்பள்ளி மாணவர்கள் நினைவு சின்னம் ஒன்றினையும் வழங்கி வைத்தனர். 


முன்பள்ளி மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் இந்த பெரஹர ஊர்வலத்தில் பங்கேற்றனர்.





















No comments

note