ஹிகாயா வல் பைத் போட்டியில் தேசிய மட்டத்திற்கு பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் பாடசாலை மாணவர்கள் தெரிவு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
இஸ்லாமிய கலை கலாசார மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ஹிகாயா வல் பைத் போட்டியில் புத்தளம் பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய உயர்தர மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அத்தோடு அதே பாடசாலையின் எப்.சீறின் பைறூஸ் பிரிவு 02 ல் கிராத் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கு, ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலையின் நிர்வாகம் சார்பாக தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் எஸ்.எச்.டி அன்சார் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (29) இஸ்லாமிய கலை கலாசார மாகாண மட்ட போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments