Breaking News

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி கனமூலை மிஹ்ராஜ்புரத்தைச் சேர்ந்த சபாயா அவர்கள் காலமானார்.

மதுரங்குளி கனமூலை மிஹ்ராஜ்புரத்தைச் சேர்ந்த சபியா அவர்கள் இன்று (29) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா அலைஹி ராஜிவூன்.


அன்னார் காலஞ்சென்ற அப்துல் உஸன் - ஜீமா பீவி. தம்பதிகளின் அன்பு மகளும் அப்துல் ரவூப் அவர்களின் அன்பு மனைவியும், சுமையா, நுஸ்கா, றிஸ்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,   றாஸலிமா, சித்தி முஸ்னியா,  பைஸர், றில்வான் மௌலவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் சப்ரான், நவ்பர் ஆகியோரின் மாமியும் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் அல்ஹாஜ் சேகு அலாவுதீன் அன்சார், சமீர் ஹாஜியார், றிஸாயா, சோப்ரா ஆகியோரின் மைத்துனியும் அஸ்ரின், சுலைமான் மௌலவி ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (29)  மஃரிப் தொழுகையுடன் மிஹ்ராஜ்புரம் பள்ளியில் தொழுகை நடாத்தப்பட்டு நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ


தகவல்

மகன்

அஸ்ரின் அலாவுதீன்




No comments

note