புத்தளம் கரைத்தீவில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டி தொடரில் டோக்கியோ சுப்பர் சிக்ஸ் அணி சம்பியன்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் கரைத்தீவு பொன்பரப்பியில் நடைபெற்ற சுப்பர் லீக் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடரில் டோக்யோ சுப்பர் சிக்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
பொன்பரப்பி சுப்பர் லீக் (PSL) எனும் இந்த போட்டி தொடரினை
கரைத்தீவு இளைஞர் அணி தலைவர் முஹம்மது ஹாபிஸின் வழிகாட்டலில் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கரப்பந்தாட்ட போட்டித்தொடர் தொடர்ந்து மூன்று தினங்களாக நடைபெற்று இறுதிப் போட்டி கரைத்தீவு கரப்பந்தாட்ட மைதானத்தில் அண்மையில் (28) மின்னொளியில் இடம்பெற்றது.
போட்டிக்கு பிரதான அனுசரணையை ஜெயா பார்ம் நிறுவனம் வழங்கி இருந்தது. இறுதிப்போட்டியில் அதிதிகளாக புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான ரனீஸ் பதியுத்தீன், ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய முகாமையாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடரில் டோக்யோ சுப்பர் சிக்ஸ் அணி சம்பியனாகவும், வொலி விக்கிங் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
No comments