Breaking News

முன்பள்ளி பாடசாலை ஆசிரியைகளுக்கான இலவச சித்திரப்பாட செயலமர்வு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

முன்பள்ளி பாடசாலை ஆசிரியைகளுக்கான இலவச சித்திரப் பாட செயலமர்வு ஒன்று அண்மையில் (21) புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஏ.எச்.எம்.அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது.


புத்தளம், வண்ணாத்திவில்லு, கல்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய 04 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து 165 முன்பள்ளி ஆசிரியைகள் இந்த இலவச செயலமர்வில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.


" இலங்கை திருநாட்டை மகிழ்வோடு வெற்றி கொள்ளும் சிறுவர்களை உருவாக்கும் ஆசிர்களுக்கு உயரிய கௌரவம்" எனும் தொணிப்பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வினை புத்தளம் எம்.என்.எம்.நுஸ்கி பவுண்டேசனுடன் இணைந்து "அட்லஸ்" நிறுவனம் ஏற்பாடு செய்திருந்து.


இதில் பிரதான வளவாளராக கல்வி அமைச்சின் தேசிய வளவாளரும், தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளரும், புத்தளம் வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகரும், நாடறிந்த ஓவியருமான கலாநிதி எம்.எம். முஹம்மது கலந்து கொண்டார்.


ஜனாதிபதி செயலகத்தின், மகளிர் விவகார அமைச்சின் கீழ், இலங்கை முன்பள்ளி ஆசிரியைகளுக்கான தொழில் துறை அமைப்பின் தலைவர் அசங்க ஸ்ரீநாத் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் எம்.என்.எம்.நுஸ்கி பவுண்டேசன் தலைவர் சமூகவியலாளர் எம்.என்.எம்.நுஸ்கி, அட்லஸ் நிறுவன விவகாரங்களுக்கான தலைவி நதீகா ஜயசிங்ஹ, விற்பனை முகாமையாளர் தரிலு, விற்பனை பிரதிநிதிகளான சுபுன் மற்றும் கமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















No comments

note