Breaking News

கற்பிட்டி பிரதேச செயலக செயலாளரின் திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் செயலாளர் ஜே.எம் சமில இந்திக ஜெயசிங்க திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக  இன்று (08) கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகல கிராம உத்தியோகத்தர்களும் கருப்பு உடையணிந்து இன்றைய அலுவலக கடமைக்கு கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.


மேற்படி கற்பிட்டி பிரதேச செயலகத்நின் செயலாளரின் திடீர் இடமாற்றம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் நீண்ட நாட்களின் பின்பு கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டஜே.எம். சமில இந்திக ஜயசிங்க  ஒரு வருடம் கூட பூர்த்தி ஆகாத நிலையில் இவரை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது அரசியல் பழிவாங்கல் என சுட்டிக்காட்டி உள்ள பிரதேச செயலக ஊழியர்கள் மேற்படி இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும் கோரிகையை முன்வைத்துள்ளனர். 


அத்தோடு கற்பிட்டி பிரதேச மக்களும் மேற்படி கற்பிட்டி பிரதேச செயலக செயலாளர் மக்களுடன் நெருக்கமான உறவுகளுடன் தமது  சேவைகளை மக்களுக்கு வழங்கி வருவதாகவும் நுண்ட நாட்களுக்கு பின் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு நியமிக்க பட்ட இவரின்  அரசியல் பழிவாங்கலாக இடம் பெற்றுள்ள இந்த திடீர் இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே பொது மக்களும் முன் வைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.






No comments

note