Breaking News

புத்தளம் மணல்குன்று பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலய முகாமைத்துவ குழுவினர் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் அமைப்பான பீ.எச்.டி. அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக  40 பிளாஸ்டிக் கதிரைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

 

குறித்த கதிரைகளின் தேவைகள் தொடர்பாக பீ.எச்.டி.அமைப்பினர் அமானா தகாபுல் பீ.எல்.சீ. பொது சமூக நலப் பிரிவிடம் வேண்டுகோளை முன் வைத்திருந்தனர்.


இந்த வேண்டுகோள் அமானா தகாபுல் பீ எல்.சீ. பொது சமூக நலப் பிரிவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சுமார் 112,000 ரூபாய் பெறுமதியான 40 கதிரைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.


பாடசாலை நிர்வாகத்தினரிடம் அமானா தகாபுல் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பீ.எச்.டி.அங்கத்தவர்களால் அண்மையில் இவைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.








No comments

note