Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் பதில் நீதவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ் இக்பால் அவர்கள் காலமானார்.

புத்தளம், பெரியபள்ளி மஹல்லா, மன்னார் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வந்தவரும், பதில் நீதவானுமாகிய, சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ்  இக்பால் அவர்கள் காலமானார்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிவூன்.


அன்னார், மர்ஹும்களான  S.M மஹ்மூத், செய்னம்பு நாச்சியா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹுமா ஹாஜியானி ஹனீஸா அவர்களின் அன்புக்  கணவரும், மர்ஹும்களான அல்ஹாஜ் ஹுதா, அல்ஹாஜ் ஹமீத் மரைக்கார், அல்ஹாஜ் பிர்தௌஸ், சாரா உம்மா ஆகியோரின் சகோதரரும்,



இனூஸா, சட்டத்தரணி இஸ்னி, இல்தாப், ஆகியோரின்  அன்புத தந்தையும், சிப்ரி, நிப்ராஸ், சாஜிதா ஆகியோரின் அன்பு  மாமனாரும்,


மர்ஹும்களான  அல்ஹாஜ் PT நிசார், முன்னாள் புத்தளம் நகர பிதா அல்ஹாஜ் பிஸ்ருல் ஹாபி மற்றும்  முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவி, பர்மிளாஸ் மற்றும் நுஃமான் ஹோல் உரிமையாளர் நுஃமான் சேர் ஆகியோரின் சகலரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா, நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்! இன்று (06) சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு புத்தளம் பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்: -

மகன் - இல்தாப்





No comments

note