Breaking News

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாடு முழுவதும் நிலவும் காற்று நிலை மேலும் தொடரும்

அரபிக் கடல், வங்களாவிரிகுடா கடல் பகுதிகளில் கொந்தளிப்பு நிலை

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ. வரை மழை


செயற்பாட்டு நிலையில் உள்ள தென்மேற்குப் பருவக்காற்று நிலை காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. வரையான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொணராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.


மின்னல், பலத்த காற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


அரபிக் கடல், வங்களாவிரிகுடா பிரதேசங்கள் கொந்தளிப்பான நிலை; அவதானம்!


செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் பகுதியில் (10N – 20N), (55E – 75E) மற்றும் வங்காள விரிகுடா (12N – 17N), (83E – 93E) வரையிலான கடல் பகுதிகளில்) மணித்தியாலத்திற்கு 70-80 கி.மீ. வேகத்தில் மிக பலமான காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படும்.










No comments

note