Breaking News

மதுரங்குளி - கனமூலையில் அஷ்ஷெய்க் - அல்ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) அவர்களுக்கு மகத்தான வரவேற்பு!

மதுரங்குளி - கனமூலையில் அஷ்ஷெய்க் - அல்ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) அவர்களை வரவேற்கும் நிகழ்வு  கடந்த (12) வெள்ளிக்கிழமை  மஸ்ஜிதுன் நூர் தைக்கா பள்ளியில் கனமூலை உலமா ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


இவர் தனது  ஆரம்பக் கல்வியை பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 7 வரை கல்வி கற்று பின்னர் பாணந்துரை தீனியா அரபுக் கல்லூரியில் அல்ஹாபிழ் மற்றும் அல் ஆலிம் பட்டத்தை பெற்றுக் கொண்டு தனது அல்குர்ஆன் மேற்படிப்புக்காக பாகிஸ்தான் ஜாமிஆ பின்னூரியா கலையகத்துக்குச் சென்று (சப்உ கிராஅத்) கிராஅத் ஓதக் கூடிய ஏழு முறைகளைக் கற்று பட்டம் பெற்று நாடு திரும்பிய அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.


கனமூலை உலமா ஒன்றியத்தின் தலைவரும், கனமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபு பாடசாலை அதிபருமான அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் ஏ.ஏ. முஜிபுர்ரஹ்மான் (மனாரி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உலமாக்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


குறித்த ஆலிம் இப்பிராந்தியத்தில் கிராஅத் ஓதக் கூடிய ஏழு முறைகள் என்ற கலையை கற்று பட்டம் பெற்றிருக்கும் முதல் ஆலிம் என்பது குறிப்பிடத்தக்கது.










No comments

note