Breaking News

கற்பிட்டி அல் அக்ஸாவின் இருவர் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் ,புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைச் சேர்ந்த உயர்தர மாணவி எம்.ஐ.எப் ஆதிகா மற்றும்  தரம் 08 ஐச் சேர்ந்த மாணவன் எம்.எஸ்.எம் அத்னான் ஆகிய  இருவரும் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன்  தெரிவித்துள்ளார்.


மேற்படி இருவரின் வெற்றிக்கும் பங்காற்றிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலையின் நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தெரிவித்துள்ளார்.




No comments

note