ஆர்ப்பாட்டம் புத்தளத்தில் பிசுபிசுப்பு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி செவ்வாய்க்கிழமை (02) பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டிருந்த தீர்மானம் புத்தளத்தில் பிசுபிசுப்பாகியுள்ளது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை, சாஹிரா தேசிய பாடசாலை, சாஹிரா ஆரம்ப பாடசாலை, வெட்டாளை முஸ்லிம் மகா வித்தியாலயம, மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வினவியபோது, அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெற்றதாகவும் தெரிவித்தனர்.
No comments